Categories
தேசிய செய்திகள்

வீட்டு வசதி திட்டத்தில் மானியம்…. இன்னும் உங்களுக்கு கிடைக்கலையா?…. இந்த லிஸ்ட்ல உங்க பேர் இருக்கான்னு செக் பண்ணுங்க….!!!

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அரசு தரப்பிலிருந்து மக்களுக்கு வீடு கட்ட மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின் பலரும் விண்ணப்பித்து பயனடைந்து வருகிறார்கள். இருந்தாலும் நிறைய பேருக்கு இன்னும் இந்த உதவிகள் வந்து சேரவில்லை. எனவே இந்த திட்டத்தில் நீங்கள் விண்ணப்பித்திருந்தால் நடப்பு ஆண்டிற்கான புதிய பட்டியலில் உங்களுடைய பெயர் உள்ளதா என சரி பார்த்துக் கொள்ளலாம்.

அதற்கு முதலில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் சிட்டிசன் அசெஸ்மென்ட் என்பதை கிளிக் செய்து உங்களின் மதிப்பீட்டு நிலையை கண்காணிக்கவும் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு பதிவு எண்ணை நிரப்பி மாநிலத்தை சரிபார்க்க கேட்கப்பட்ட தகவலை நிரப்ப வேண்டும். இறுதியாக மாநில, மாவட்டம் மற்றும் நகரமாகியவற்றை தேர்ந்தெடுத்து சமர்ப்பித்து உங்கள் விண்ணப்பத்தின் நிலை எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் கீழ் மூன்று லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள் வீடு இல்லாதவர்கள் பயனடைய முடியும். இதற்காக அரசு 2.50 லட்சம் மானியம் வழங்கி வருகிறது.மூன்று தவணைகளாக இந்த மானியம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |