வீட்டு வரி ரசீதில் குளறுபடி ஏற்பட்டதால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் நிரியும் பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு பல சமுதாய மக்கள் வசித்து வருகிறார்கள் . இந்நிலையில் அந்த கிராமத்தில் உள்ள ஒரு பிரிவினருக்கு அரசு சார்பில் இடம் ஒதுக்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக இவர்களிடமிருந்து வீட்டு வரி ரசீது நரியும் பட்டி கிராமம் என்ற பெயரில் வசூலிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இவர்கள் வசித்து வரும் கிராமம் சொக்கம்பட்டி என்று வீட்டு வரி ரசீது கொடுத்துள்ளார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் தற்போது நடைபெறவிருக்கும் 2021 காண சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்கள் இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியுள்ளது.