Categories
தேசிய செய்திகள்

“வீட்டு வறுமை” வேலைக்கு சென்ற சிறுமி…. “என் ஆசைய நிறைவேத்து” மறுத்ததால் தீ வைத்து எரித்த இளைஞர்…!!

குடும்ப வறுமையினால் வேலைக்கு சென்ற 13 வயது சிறுமி இளைஞரின் ஆசைக்கு  இணங்காததால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி குடும்ப வறுமையினால் வீட்டு வேலைக்கு செல்ல தொடங்கியுள்ளார். அவர் வேலை செய்து கொண்டிருந்த வீட்டில் இருந்த இளைஞர் ஒருவர் சிறுமிக்கு அடிக்கடி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியிடம் தனது ஆசைக்கு உடன்பட இளைஞர் வற்புறுத்தியுள்ளார். ஆனால் சிறுமி மறுத்துள்ளார்.

இதனால் சிறுமியை அடித்து துன்புறுத்திய இளைஞர் அதன் பிறகும் சிறுமி சம்மதிக்காததால் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துள்ளார். பாதி எரிந்த நிலையில் சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சமையல் செய்யும் போது தவறுதலாக தீ பிடித்து விட்டது என குடும்பத்தினர் நடத்தினர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த சிறுமி கண் விழித்ததும் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் இளைஞரை கைது செய்தனர்.

Categories

Tech |