சென்னையில் வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த சிறுமியை தூக்கிச் சென்று பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது.
இந்நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் வீட்டு வாசலில் இன்று காலை கோலம் போட்டுக் கொண்டிருந்த 14 வயது சிறுமியை தூக்கிச் சென்று பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை வாயை பொத்தி தூக்கிச் சென்று பலாத்காரம் செய்த இளைஞர் விக்னேஷ் தலைமறைவாகியுள்ளார். பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாகியுள்ள விக்னேஷ் என்ற இளைஞரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.