கோவை மாவட்டம் எஸ்ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திராசாமி. இவர் பூ மார்க்கெட் பகுதியில் தங்கும் விடுதி வைத்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த விடுதியில் மகாலிங்கம் என்பவருடைய மனைவி விஜயா, மகன் தங்கராஜ் ஆகியோர் ஒரு வருடமாக வசித்து வந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாகவே இவர்கள் வாடகை கொடுக்காமல் இருந்துள்ளனர். இதனால் சந்திராசாமி அவர்களுடன் சென்று வாடகை கொடுக்காமல் இருப்பதால் வெளியேறுமாறு கூறியதாக கூறப்படுகின்றது.
இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கோபமடைந்த தாய், மகன் ஆகிய இரண்டு பேர் சேர்ந்து சந்திரசாமியை தகாத வார்த்தைகளால் பேசி அடித்துள்ளனர். இதுகுறித்து கந்தசாமி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உரிமையாளரை தாக்கிய விஜயா மற்றும் அவருடைய மகன் தங்கராஜ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.