Categories
உலக செய்திகள்

“வீட்டு வேலை செய்யும் மனைவிகளுக்கு சம்பளம்”… நீதிமன்றத்தின் உத்தரவால்…. கணவர்களுக்கு ஷாக்..!!

வீட்டு வேலை செய்வதற்கு சம்பளம் கேட்ட மனைவி. அதற்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன தெரியுமா? நீங்களே பாருங்கள்.

இந்த ஆண்டு சீனாவில் புதிய  சிவில் சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டம் வீட்டில் கூடுதல் பொறுப்புகளை சுமந்த கணவன் அல்லது மனைவி அதற்கு ஏற்ற இழப்பீட்டு தொகையை பெற வழிவகை செய்கின்றது.  இது உறுதி செய்யும் விதமாகவே ஜியங்  நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாகரத்து வழக்கில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு ஒரு பேசும்  பொருளாக மாறியுள்ளது.

திருமணமான 6 ஆண்டுகளில் குழந்தைகளை கவனித்துக் கொண்டது, வீட்டு வேலை செய்தது, பொறுப்புகளை கவனித்து போன்றவற்றை தான் செய்ததாகவும். தனது கணவன் அலுவலத்திற்கு மட்டுமே சென்றதாக மனைவி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.  எனவே வீட்டு வேலை, குழந்தைகளை கவனிப்பது போன்றவற்றிற்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த வழக்கில் மனைவிக்கு 50,000 யுவான் இழப்பீடு, குழந்தையை கவனித்து கொண்டதற்கு 2000 யுவான் இழப்பீடு வழங்கவேண்டும் என பெய்ஜிங் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Categories

Tech |