Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வீட்டு வேலை செய்…. “கண்டித்த பெற்றோர்”… மகள் எடுத்த விபரீத முடிவு..!!

ஓசூர் அருகே சிறுமி தண்ணீர்  தொட்டியில்  குதித்து  தற்கொலை  செய்து  கொண்ட சம்பவம்  அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம்  ஓசூரில்  பேகேப்பள்ளி   அம்பேத்கர்  காலனியில் வசித்து  வருபவர் வெங்கடேஷ். இவருக்கு 16 வயதில்  நித்தியராணி என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் நித்தியராணி வீட்டில் வேலைகளை செய்யாமல்   இருந்து வந்துள்ளதாகவும் ,   இவரை பெற்றோர் கண்டித்ததாகவும்  சொல்லபடுகிறது.

இதனால்  வேதனை  அடைந்த  நித்தியா  பாகூர்  பகுதியில்  இருக்கும்  ஒரு  தண்ணீர்  தொட்டியில் குதித்து  தற்கொலை  செய்து கொண்டார். இதனை  அறிந்த  பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.  இதையடுத்து சம்பவம்  அறிந்த  ஓசூர்  சிப்காட்  போலீசார் விரைந்து  வந்து  சிறுமி  உடலை கைப்பற்றி  பிரேத  பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர்.

மேலும்  சிறுமி  தற்கொலை  குறித்து  போலீசார்  வழக்குப்பதிவு  செய்து  விசாரணை செய்து வருகின்றனர். இந்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும்,  சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

Categories

Tech |