Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டைவிட்டு வெளியே வந்தால் ரூ.2000 அபராதம்…. அதிரடி அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 26 ஆம் தேதி  முதல் பல கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் கொரோனா விதிகளை மீறி 300 பேரை அனுமதித்த தனியார் விடுதிக்கு சுகாதார குழுவினரால் சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்திந்த மாநகராட்சி ஆணையர் பேசுகையில், “சென்னையில் 15 கொரோனா மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 21 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் இருப்பவர்கள் அல்லது அவரது குடும்பத்தினர், விதியை மீறி வெளியே வந்தால் ரூ 2000 அபராதம் விதிக்கப்படும்.இரண்டாவது முறை விதிகளை மீறி வெளியே வந்தால் கொரோனா மையங்களுக்கு கொண்டு செல்லபடுவர்கள் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.

Categories

Tech |