Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டை அடமானம் வைத்த வாலிபர்…. 25 லட்ச ரூபாய் வரை நஷ்டம்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

பட்டதாரி வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள முகப்பேர் மேற்கு 2-வது பிரதான சாலையில் பட்டதாரியான கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் தனது தந்தையின் பெயரில் இருக்கும் வீட்டை அடமானம் வைத்து ஆன்லைன் மூலம் ஷேர் மார்க்கெட்டில் பண பரிவர்த்தனை செய்து வந்துள்ளார். ஆனால் ஷேர் மார்க்கெட்டில் 25 லட்ச ரூபாய் வரை கார்த்திக்கிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக் தனது வீட்டு மாடியில் வைத்து உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்துள்ளார்.

இதனை அடுத்து கருகிய நிலையில் கிடந்த கார்த்திக்கை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |