நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வடக்கு மட விளாகம் பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இவர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, தஞ்சை சிந்தாமணி குடியிருப்பை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கத்தின் மனைவி ராதிகாவும், மற்றொரு நபரும் இணைந்து சிந்தாமணி குடியிருப்பில் இருக்கும் ஒரு வீட்டை என்னிடம் ஒத்திக்கு கேட்டனர். அதன்படி இரண்டு பேருக்கும் வீட்டை ஒத்திக்கு கொடுத்தும் அவர்கள் பணம் தரவில்லை.
பலமுறை கேட்டும் அவர்கள் பணத்தை தராததால் வீட்டை திருப்பி தாருங்கள் என கூறினேன். அதனையும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. இதனால் வீட்டை ஒத்திக்கு எடுத்து பணம் கொடுக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராதிகாவை கைது செய்தனர். மற்றொரு நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.