Categories
தேசிய செய்திகள்

வீட்டை காலி செய்யும் பிரியங்கா….!! பாஜக எம்.பி தேநீர் விருந்துக்கு அழைப்பு …!!

வீட்டை காலி செய்ய வேண்டும் என்று மத்திய வீட்டு வசதித்துறை கூறியபின் தான் தங்கியிருந்த வீட்டிற்கு கூடிவரும் பா.ஜனதா எம்பியான அனில் பலூனியை தேனீர் விருந்துக்கு அழைத்துள்ளார் பிரியங்கா காந்தி.

சென்ற வருடம் நவம்பர் மாதத்தில் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்றோர்க்கு எஸ்பிஜி பாதுகாப்பு விலக்ககளிக்கப்பட்டு சிஆர்பிஎப் இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது. இசட் பிளஸ் பாதுகாப்பாகக் குறைக்கப்பட்ட ஒருவருக்கு அரசு  சார்பாக வீடு வழங்குவதற்கு சட்டத்தில் எதும்  இடமில்லை. அதனால், டெல்லி லோதி எஸ்டேட்டில் இருக்கும் எண் 35, 5பி இல்லத்தை பிரியங்கா காலி செய்ய வேண்டும்.

மேலும் ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் வீட்டைக் காலி செய்யவில்லை எனில். அபராதம் அல்லது வாடகை வசூலிக்கப்படும் எனத் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர விவகாரத்துறை கடந்த 1-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.காங்கிரஸ் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்திக்கு இந்த வீடு கடந்த 1997-ம் வருடம் மத்திய அரசால் வழங்கப்பட்டது. இவர் ஏறக்குறைய 23 வருடங்கள் இந்த இல்லத்தில் தங்கியிருந்தார். ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் பிரியங்கா காந்தி தங்கியுள்ள வீட்டை காலி செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டார்.

டெல்லியில் தங்கிக் கொள்வதற்காக குருகிராமில் செக்டர் 42 பகுதியில் தனியாக வீடு ஒன்றை தற்காலிகமாக பிரியங்கா காந்தி வாடகைக்கு எடுத்துள்ளார். பிரியங்கா காந்தி தங்கியிருந்த அரசு இல்லத்தை, அவருக்குப் பின்னால் பா.ஜனதா தேசிய ஊடகப்பிரிவு தலைவரும், எம்.பி.யுமான அனில் பலூனிக்கு மத்திய வீட்டுவசதித்துறை ஒதுக்கி இருக்கிறது.இந்த நிலையில் தான் ஏற்கனவே தங்கியிருந்த வீட்டுக்கு புதிதாக குடியேற வரும் பா.ஜனதா எம்.பி. அனில் பலூனிக்கு தேநீர் விருந்தளிக்க பிரியங்கா காந்தி கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

பா.ஜனதா எம்.பி. அனில் பலூனி அலுவலகத்துக்கும் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுவரை அனில் பலூனியிடம் இருந்து எந்த ஒரு  தகவலும் பிரியங்கா காந்திக்கு வரவே இல்லை. மத்திய அரசு குறிப்பிட்டுள்ள காலகெடு முடிவதற்குள் வீட்டைக் காலி செய்ய பிரியங்கா காந்தி தயார் நிலையில் இருக்கிறார். அதற்கு முன், அந்த வீட்டில் குடியேற வரும் அனில் பலூனிக்கு வீடு சவுகரியமாக இருக்கிறதா? அல்லது ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டுமா? என்று கேட்டுத் தெரிந்து கொள்ளவதற்காகவும், பரஸ்பர மரியாதை மற்றும் நட்புக்காக மட்டுமே தேநீர் விருந்தளிக்க பிரியங்கா காந்தி அழைத்துள்ளார் என்பது தகவல்கள் மூலம் வெளியாகியுள்ளன.

Categories

Tech |