ஒரு தந்தை மற்றும் மகள் தங்களுடைய வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது வீட்டில் சீக்ரெட் லாக்கர் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அந்த லாக்கரை திறப்பதற்கு தந்தை மற்றும் மகள் 2 பேரும் மிகவும் முயற்சி செய்துள்ளனர். ஆனால் லாக்கரை அவர்களால் திறக்க முடியவில்லை. இதனால் சிறுமி மற்றும் தந்தை 2 பேரும் சேர்ந்து லாக்கரின் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். அவர்கள் லாக்கரை ஓபன் செய்வதற்கு எங்களுக்கு உதவி செய்யுங்கள் என போஸ்ட் செய்திருந்தனர்.
அதைப்பார்த்த ஒருவர் லாக்கரை திறப்பதற்கான பாஸ்வேர்டை அவர்களுக்கு தெரிவித்தார். அந்த பாஸ்வேர்டை பயன்படுத்தி லாக்கரை திறந்துள்ளனர். அப்போது லாக்கரில் தண்ணீர் மட்டும் இருந்துள்ளது. இதனால் தண்ணீருக்குள் சிறுமியின் தந்தை தன்னுடைய கைகளால் தேடிப் பார்த்தபோது அதில் ஒரே ஒரு தங்க நாணயம் மட்டும் இருந்துள்ளது. அந்த தங்க நாணயத்தை விற்பனை செய்தபோது அந்த ஒரு நாணயத்திற்கு 1 கோடியே 6 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.