ரஷ்யாவில் 21ஆம் தளத்தில் இருந்து ஒரு பெண் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் Olga Nauletova என்ற 27 வயதான பெண் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டின் ஜன்னல்களை சுத்தம் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக 21ஆம் தளத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். சுமார் 220 அடி உயரத்திலிருந்து விழுந்த Olga Nauletova சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த கேமரா ஒன்றில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அந்த பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இந்த சம்பவத்தின் பின்னணியில் வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.