வீட்டை சுத்தம் செய்தபோது பெண்ணிற்கு கிடைத்த லாட்டரியில் பெரும் தொகை விழுந்ததால் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளார்
கனடாவில் உள்ள டெல்டா நகரை சேர்ந்த கரோலின் என்பவர் சமீபத்தில் தனது வீட்டை சுத்தம் செய்துள்ளார். அப்போது சமையலறையிலிருந்து அவருக்கு எப்போதோ வாங்கிய லோட்டோ 6/49 எனும் லாட்டரி டிக்கெட் கிடைத்தது. அதனை வாங்கிய அவர் மறந்து சமையல் அறையில் வைத்திருந்தார்.
பின்னர் லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்துள்ளதாக என்பதை அவர் பரிசோதித்த போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு எதேச்சையாக கிடைத்த லாட்டரி டிக்கெட்டிற்க்கு $58,502.50 இந்திய மதிப்பில் 43,39,045 ரூபாய் விழுந்திருந்தது. இதுகுறித்து கரோலின் கூறுகையில் “எனக்கு பரிசு விழுந்ததை உறுதியாக நம்ப முடியவில்லை. கனவா அல்லது உண்மையா என நானே என்னை கிள்ளி பார்த்துக் கொண்டேன்” என கூறியுள்ளார்.