Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டை புதுப்பிக்கும் பணி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்….. போலீஸ் விசாரணை…!!

கான்கிரீட் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டை அழகப்பபுரம் நடுத்தெருவில் சண்முகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை புதுப்பித்துக் கொண்டு முடிவு செய்தார். இந்நிலையில் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவர் ஒப்பந்தம் எடுத்து பழைய வீட்டை இடித்து புதுப்பித்து கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று பழைய காங்கிரீட் தளத்தை எந்திரம் மூலம் இடிக்கும் பணி நடைபெற்றது. இதில் பூலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த வேலுசாமி(57) உள்ளிட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக கான்கிரீட் சுவர் இடிந்து வேலுச்சாமியின் மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று வேலுச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |