Categories
சினிமா

“வீட்டை விட்டு வெளியேபோகும் பாக்கியா”…. வைரலாகும் ப்ரோமோ….!!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரின் ப்ரோமோ வைரலாகி வருகின்றது.

விஜய் டிவியில் பிரபல சீரியலாக ஒளிபரப்பாகி வருகின்றது பாக்கியலட்சுமி. தற்பொழுது இந்த சீரியலில் கோபிக்கு பாக்கியா விவாகரத்து வழங்கியது அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நீதிமன்றத்தில் பாக்கியா பேசியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வீட்டில் விஸ்வரூபம் எடுக்கின்றார் கோபி. பாக்யாவை வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்பதில் கோபி உறுதியாக இருக்கின்றார். வீட்டில் இருக்கும் ஜெனி, இனியா, ஈஸ்வரி பாட்டி, செழியன் என எல்லாரும் பாக்கியவிடம் கெஞ்சுகின்றார்கள். ஆனால் கோபி எல்லோரையும் தடுக்கின்றார்.

மேலும் பாக்யாவின் சொந்த உழைப்பில் வாங்கிய ஒரு பொருள் கூட வீட்டில் இல்லை எனக் கூறி அசிங்கப்படுத்துகின்றார். ஆனால் பாக்கிய எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு அமைதியாக செல்கின்றார். பின் பாக்கியம் ரூமுக்கு சென்று தனது துணிகளை எடுக்கின்றார். அப்பொழுது இனியா, அமுது கெஞ்சுகின்றார்கள். வீட்டை விட்டு போக வேண்டாம் என்று, ஆனாலும் பாக்கியா தனது முடிவில் உறுதியாக இருக்கின்றார்.

வீட்டில் உள்ளவர்கள் எழில் மீது கோபத்தை திருப்புகின்றார்கள். எழிலின் சப்போட்டால் தான் பாக்கியா இப்படி செய்வதாக கூறுகின்றார்கள். கோபிக்கு திடீரென பாக்கியா வீட்டிலேயே இருந்து விடுவாரோ என பயம் எழுகின்றது. இதனால் மேலும் பாக்கியாவை அசிங்கப்படுத்துகின்றார்.

ராமமூர்த்தி தாத்தா, ஈஸ்வரி பாட்டி உள்ளிட்டோர் கோபி செய்த தவறை மன்னித்து பாக்யா விவாகரத்து செய்தது தான் தவறு என எண்ணுகின்றார்கள். இடையில் செல்வி அக்காவை கோபி இழுக்கின்றார். ஆனால் அதற்கு தகுந்த பதிலை செல்வி அக்கா கொடுத்து விடுகின்றார். வீட்டை விட்டு வெளியேறும் வரை இனியா கெஞ்சுகின்றார். ஆனால் பாக்கியாவே நினைத்தாலும் கோபி வீட்டை விட்டு வெளியே தொரத்தாமல் விடுவதாக தெரியவில்லை. அதனால் பாக்கியம் துணிகளை எடுத்துக்கொண்டு தன்னுடைய மாசாலா ஆபீசுக்கு செல்கின்றார்.

Categories

Tech |