Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டை விட்டு வெளியேறிய ரஞ்சிதா…! ராஜ்குமார் சொன்ன பகீர்… திண்டுக்கல் கள்ளக்காதலில் அதிர்ச்சி …!!

வேடசந்தூர் அருகே தன்னுடைய கணவன் மற்றும் இரு குழந்தையை விட்டுவிட்டு காதலுடன் சென்ற பெண்ணை காதலனே  அடித்துக் கொன்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த அய்யலூர் பகுதியை சேர்ந்தவர்கள் செந்தில் மணி அவரது மனைவி ரஞ்சிதா. இவர்களுக்கு இரண்டு  குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த மார்ச் 30ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியேறிய ரஞ்சிதா, பின்னர் வீடு திரும்பவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் ரஞ்சிதாவின் தந்தை முருகேசன் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் எரியோடு பகுதியை சார்ந்த கார் ஓட்டுனர் ராஜ்குமாருடன் ரஞ்சிதாவிற்கு தவறான உறவு ஏற்பட்டுள்ளது கண்டறிந்து அவரிடம் விசாரித்தனர்.

அதில் அவர் ரஞ்சிதாவை வேடசந்தூர் ரெங்கமலை சிவன் கோவிலுக்கு அழைத்துச் சென்று, அடித்து கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டதாக திரு வைத்துள்ளார்.  இதனிடையே ராஜ்குமாரை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் அங்கு எலும்புக்கூடுகளை சேகரித்து விசாரணை செய்து வருகின்றன.

Categories

Tech |