நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் மோகனூர் ரோடு பகுதியில் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திவேல் (27) என்ற மகன் உள்ளார். இவர் எம்.பி.பி.எஸ் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். கடந்த 11ஆம் நண்பர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சகிதிவேல் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் சக்திவேலை பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக இரவு சக்திவேல் கன்னியாகுமரிக்கு வந்து அங்குள்ள ஒரு விடுதியில் தங்குவதற்காக அறை கேட்டுள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் கன்னியாகுமரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்திய போது, சக்திவேல் கடந்த ஒரு வருடமாக நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது தெரிய வந்துள்ளது. இது பற்றி அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின் போலீசார் சக்திவேலை அவரது தந்தையுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.