நல்லூர் காவல் நிலையத்தில் காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கந்தம்பாளையம் அருகே இருக்கும் கவுண்டிபாளையத்தைச் சேர்ந்த பூபாலன் என்பவர் பிஎஸ்சி படித்துவிட்டு ரிக் வண்டியில் மேலாளராக வேலை செய்து வருகின்றார். இவரும் கொளந்தாபாளையத்தை சேர்ந்த தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் வருடம் படித்து வரும் பிரியதர்ஷினி என்பவரும் சென்ற 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்கள்.
இந்த நிலையில் திருமணம் செய்ய முடிவு செய்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருச்செங்கோடு ஈஸ்வரன் கோவிலில் திருமணம் செய்து கொண்டார்கள். இதையடுத்து காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அவர்கள் தஞ்சம் அடைந்தார்கள். இதனால் போலீசார் இருவரின் பெற்றோர்களையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி பபூபாலன் குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தார்கள்.