மகாராஷ்டிரா மாநிலத்தில் வீட்டோட மாப்பிள்ளையாக இருந்த இளைஞர் மனைவியையும், மாமியாரையும் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் என்பவரின் மனைவி சுப்ரியா. சுப்ரியாவின் தந்தை சமீபத்தில் இறந்து விடவே, அவர் தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் தாயார் வீட்டில் வந்து வசித்து வருகிறார். இதில் ஜெகதீஷ்க்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு நபருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் மனைவியும் மாமியாரும் தனக்கு சாதகமாக பேசாமல் எப்பொழுதும் அவர்களுக்கு ஆதரவாக பேசி வந்துள்ளனர். சம்பவம் நடந்த தினத்தன்று இரவு சண்டை வந்துள்ளது.
அப்போது ஜெகதீஷ் தனக்கு ஆதரவாக இருக்குமாறு மனைவி மற்றும் மாமியாரிடம் கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் அவருக்கு ஆதரவாக பேச வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து மனைவி மற்றும் மாமியார் குத்தி கொலை செய்துள்ளார். இதில் மனைவி சுப்ரியா சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். மாமியார் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.