வீட்ல விசேஷம் திரைப்படத்தை கடுமையாக விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறனுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக திகழ்ந்து வந்தவர் ஆர்ஜே பாலாஜி. பிஸியான காமெடியனாக இருந்து வந்த பாலாஜி எல்கேஜி படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார். இந்த படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் படத்தில் ஹீரோவாக நடித்தது மட்டுமல்லாமல் இயக்கவும் செய்தார் ஆர் ஜே பாலாஜி. இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜி உடன் நயன்தாரா, ஊர்வசி போன்றோரும் நடித்திருந்தனர். எல்கேஜி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பினை பெற்று வெற்றியடைந்தது.
#VeetlaVisheham நடந்தது என்ன ?😎 pic.twitter.com/2gfyIsJXP9
— RJ Balaji (@RJ_Balaji) June 21, 2022
இந்நிலையில் அண்மையில் ஆர்.ஜே பாலாஜி நடித்த மற்றும் இணை இயக்குனராக இயக்கிய வீட்டுல விசேஷம் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் படத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவருக்கு பதிலடி தரும் விதமாக ஆர்ஜே பாலாஜி வீடியோ ஒன்றை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவானது தற்பொழுது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. அதில் அவர் பேசியதாவது படம் யாருக்காக எடுத்தோமோ அவர்களுக்கு பிடித்தால் மட்டும் போதும். எந்த நீல சட்டைக்கும் படம் பிடிக்க வேண்டிய அவசியமில்லை என கூறியுள்ளார்.