Categories
சினிமா தமிழ் சினிமா

‘வீட்ல விஷேசம்’…. பிக் பாஸ் பிரபலம் சொன்ன குட் நியூஸ்….!!!!

பிக்பாஸ் பிரபலமான ஷிவானி விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் ‘விஜேஎஸ் 46’ என்ற படத்தில் போலீசாக நடிக்கிறார். இந்த நிலையில் ஷிவானி மேலும் ஒரு படத்தில் நடிப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார். அதாவது ஷிவானி இன்ஸ்டாகிராமில் நடிகரும், இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “ஆர்.கே.பாலாஜியின் அடுத்த படத்தில் நடிப்பதில் மிக்க மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/p/CYtPIsbP2uk/?utm_medium=copy_link

ஆனால் இந்த படம் குறித்து ஷிவானியிடம் கேட்டதற்கு எந்த தகவலும் தற்போது தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். இருப்பினும் இந்தி படமான “பதாய்ஹோ” என்ற படத்தை தான் தமிழில் “வீட்ல விசேஷம்” என்கிற பெயரில் ஆர்.ஜே.பாலாஜி ரீமேக் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்கிறாராம் ஷிவானி. மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, சத்யராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

Categories

Tech |