நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வேதங்களும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் சிலர் மருத்துவமனைகளுக்கு செல்ல இயலாத நிலையிலும் வீட்டின் தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் சிவா என்பவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இவருடைய வீட்டில் ஒரே ஒரு அறை மட்டும் தான் இருக்கிறது என்பதால், வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும் பரவி விடக்கூடாது என நினைத்துள்ளார்.
இதையடுத்து ஒரு யோசனை தோன்றியுள்ளது. இந்நிலையில் இவர் தன்னுடைய வீட்டின் முன் இருக்கும் உயரமான மரத்தில் கட்டிலை வைத்து கட்டி அதில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். மேலும் அவருக்கு கொடுக்க வேண்டிய மருந்து மாத்திரைகள், உணவு எல்லாவற்றையும் குடும்பத்தினர் ஒரு கயிற்றில் கட்டி அனுப்பி வைக்கின்றனர். இந்த சம்பவம் காண்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.