Categories
பல்சுவை

வீண் செலவை குறைத்து…. பணத்தை சேமிப்பது எப்படி?…. இதோ 5 வழிகள்…. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!

நாம் தினந்தோறும் சம்பாதிப்பதற்காக ஓடி ஓடி உழைக்கிறோம். ஒவ்வொரு ஓட்டத்தையும் காசாக்க வேண்டுமென்று முயற்சி செய்கிறோம். இப்படி ஒரு மனிதன் ஒரு நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை உழைப்பிற்காக செலவிடுகிறான். அந்த உழைப்பிற்கான பணத்தை சம்பளமாக பெறுகிறார். ஆனால் அந்த பணத்தை நாம் எப்படி சேமித்து எதிர்காலத்தை வளமாக மாற்ற வேண்டும் என்பதற்கான சிறந்த வழிகளை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

செலவு அனைத்தையும் பதிவு செய்க:

தினமும் பணியாற்றி அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து முதலில் கணக்கு வழக்கில்லாமல் செலவு செய்யக்கூடாது. என்று? எதற்காக? செலவு செய்கிறோம் என்ற யோசனை இருக்க வேண்டும். ஒரு மாதத்தில் நாள்தோறும் நாம் எதற்காக இவ்வளவு பணத்தை செலவிடுகிறோம் என்பதை குறித்து வைக்க வேண்டும். தேதியுடன் குறித்து வைக்கும் போது தேவையான செலவு எது? தேவையற்றது எது? என்பதை நம்மால் எளிதில் கண்டுபிடித்துவிட முடியும்.

பட்ஜெட்டை திட்டமிடுங்கள்:

முதலில் நாம் வாங்கும் சம்பளத்திற்கு பட்ஜெட்டை தயார் செய்ய வேண்டும். மாதம் சம்பளம் எவ்வளவு நமது வீட்டின் மாத செலவு எவ்வளவு என்பதை ஒரு பட்ஜெட்டாக உருவாக்க வேண்டும். வீடு மற்றும் உணவு ஆகியவற்றிற்காக சம்பளத்தில் 30 சதவீதம் தொகையை ஒதுக்கலாம். நாம் அன்றாட செலவு உள்ளிட்ட சில விஷயங்களுக்கு 30%, சேமிப்புக்கு 20% என்று ஒதுக்கி செலவு செய்யும் பொழுது தேவையற்ற செலவுகள் எதுவும் செய்யாமல் பணத்தை சேமிக்க முடியும்.

சேமிப்பை அதிகப்படுத்த வேண்டும்:

செலவுகளை படிப்படியாக குறைத்துக் கொண்டு சேமிப்பை அதிகரிக்க வேண்டும். ஒரு இலக்கை நிர்ணயித்து வைத்து அதனை குறிப்பிட்ட ஆண்டுக்குள் அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் பயணிக்க வேண்டும். அதாவது நீங்கள் ஒரு வீடு வாங்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால் அதனை 5 ஆண்டுக்குள் வாங்க வேண்டும் என்று நினைத்து பணத்தை சேமித்து வந்தால் செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பை தொடங்க முடியும்.

முதலீடு செய்யுங்கள்:

நாம் சம்பாதிக்கும் பணத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும். அதற்கு நாம் சிறந்த முதலீட்டில் முதலீடு செய்யவேண்டும். முதலீடு செய்து பணத்தை கூட்ட வேண்டும் அதற்கான ஆலோசனையை முதலீட்டாளர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். பணத்தை பல வழிகளில் முதலீடு செய்யலாம். சீட்டு போடுவது, தங்கத்தில் முதலீடு செய்வது, இல்லை எனில் நிலம் வாங்கிப் போடுவது என்று உங்களிடம் உள்ள பணத்தை ஒன்றில் செலுத்தி அதனை இரட்டிப்பாக்க முடியும்.

இலக்கை நிர்ணயம் செய்யவேண்டும்:

சேமித்த பணத்தை எதிர்காலத்தின் முக்கியத்துவம் அறிந்து அதை பாதுகாத்து வைக்க வேண்டும். குழந்தைகளின் உயர் கல்வி, வயது முதிர்வு என்று பல்வேறு தேவைகளுக்கு அவை பயன்படும். வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு சூழ்நிலைகளில் இந்த திட்டம் உங்களுக்கு ஒரு சிறந்த உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

Categories

Tech |