தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள் 137 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு பிப்ரவரி 4ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேட்புமனு தாக்கலை பெறுவதற்காக மண்டல வாரியாக தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிடவில்லை என்று வீண் வதந்தி பரப்பாதீர் என்று விஜய் மக்கள் இயக்கம் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கண்டிப்பாக போட்டியிடுகிறார்கள். ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு அதிக இடங்களை வென்று காட்டியது போல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என்று விஜய் மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.