மதுரையில் பொது முடக்க விதிகளை மீறி செயல்பட்ட 43 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மதுரை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்து வரும் காரணத்தினால் ஊரடங்கு உத்தரவு இன்று அதிகாலை முதல் பிறப்பிக்கப்பட்டது. மதுரை மாநகராட்சிப் பகுதிகள் மற்றும் திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் பறவை பேரூராட்சி ஆகிய பகுதிகளில் இந்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை மட்டும் வாங்குவதற்கு வெளியே வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை தான் கடைகள் திறந்திருக்க வேண்டும் என்று மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்து இருந்தது. மேலும் மாவட்ட, மாநகர காவல்துறையின் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வந்தார்கள் .இதில் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் முறையாக ஊரடங்கு உத்தரவை பின்பற்றப்படாமல், தனிமனித இடைவெளி மற்றும் முகக் கவசங்கள் அணியாமல் செயலபட்ட பழக் கடைகள், டீ கடை மற்றும் பேக்கரி உள்ளிட்ட 43 கடைகளை மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மாநகர காவல் துறையினரும் சீல் வைத்து இருக்கிறார்கள்.