குரோம்பேட்டை சாலையில் வெளியேறும் கழிவுநீரால் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல்பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்!
சென்னை அடுத்த குரோம்பேட்டை போஸ்டல் நகர் பல்லாவரம் நகராட்சிக்குள்பட்ட 22ஆவது வார்டு வரசித்தி விநாயகர் கோவில் தெருவில் பாதாள சாக்கடை கழிவுநீர் சாலை முழுவதும் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. பாதள சாக்கடை கழிவுநீர் கடந்த நான்கு நாள்களாக சாலை முழுவதும் தேங்கியுள்ளது.
வீடுகளில் இருக்கும் மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு கழிவுநீர் தேங்கி தூர்நாற்றம் வீசுகிறது. சாலைகளில் வெளியேறும் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்து தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் வீடுகளில் உள்ள கிணறுகளில் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.