Categories
தேசிய செய்திகள்

வீதியில் வசிப்போருக்கு ரேஷன் அட்டை – மத்திய அரசு…!!!

இந்திய குடிமக்களுக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது குடும்ப அட்டை. இது முக்கிய ஆவணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக மலிவான விலையில் கடையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் சாதாரண மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். மேலும் அரசு தரப்பிலிருந்து பல்வேறு நிதி உதவிகள் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. எனவே ரேஷன் கார்டு வைத்திருப்பது ரொம்ப முக்கியம்.

இந்நிலையில் தெருவோரம் வசிப்பவர்கள், ரிக்ஷா தொழிலாளர்கள், வீதியில் குப்பை எடுத்து பிழைப்பவர்கள், சிறு சிறு பொருட்களை விற்பவர்கள், மிகவும் நலிவடைந்தவர்களுக்கு ரேஷன் அட்டைகள் இல்லாததால் அரசின் நலத்திட்டங்கள் கிடைப்பதில்லை. எனவே இவர்கள் அனைவரையும் கண்டறிந்து அவர்களுக்கு தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.

Categories

Tech |