Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வீதி வீதியாக கிருமிநாசினி தெளிப்பு… ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில்… கொரோனா விழிப்புணர்வு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டாங்கிபட்டி ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின் படி கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி மாவட்டம் முழுவதும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் முக கவசம் வழங்கி கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் ஊராட்சி மன்ற தலைவர் மந்திரகாளி தலைமையில் சிவகங்கையை அடுத்த கண்டாங்கிபட்டி ஊராட்சியில் ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலர் சிலம்பரசன் ஆகியோர் வீதி, வீதியாக சென்று முக கவசம் வழங்கி கிருமிநாசினி தெளித்தனர். மேலும் கொரோனா குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.

Categories

Tech |