Categories
தேசிய செய்திகள்

“வீரசவார்க்கர் பேனர்” திடீரென வெடித்த வன்முறை…. 144 தடை உத்தரவு நீட்டிப்பு…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

144 தடை உத்தரவு நீடிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சிவமொக்கா பகுதியில் சுதந்திர தின விழா அன்று வைக்கப்பட்ட வீரசாவர்க்கர் பேனர் அகற்றப்பட்டது. இதனால் இரு தரப்பினருக்கிடையே கடுமையான தகராறு  ஏற்பட்டது. இந்த தகராறின் போது சிலருக்கு கத்திக்குத்து விழுந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வன்முறையை தடுப்பதற்காக போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இருப்பினும் வன்முறையின் போது சிலருக்கு கத்திக்குத்து விழுந்ததால் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தகராறு ஏற்பட்ட பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த 144 தடை உத்தரவு ஆகஸ்ட் 26-ம் தேதி வரை நீடிக்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் விநாயகர் சிலைகளை வைக்கும் போது பேனர்கள் வைக்கக்கூடாது எனவும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |