Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு….. உடன்கட்டை ஏறிய காதல் மனைவி….. தொல்லியல் ஆராய்ச்சியாளரின் தகவல்…..!!!

14-ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் மற்றும் உடன்கட்டை ஏறிய சதிக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மயிலேறிபாளையத்தில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இங்குள்ள வளாகத்தில் 14-ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாம்பு கடித்து இறந்த வீரனின் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 4 அடி உயரமுடைய நடுகல் ஆகும். இதுகுறித்து கோவை தொல்லியல் ஆராய்ச்சியாளர் தமிழ் மறவன் ரமேஷ் கூறியதாவது, இந்த வீரன் உயிரிழந்த துக்கம் தாங்காமல் அவரது காதல் மனைவி உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக் கொண்டார்.

இந்த நடுகலுக்கு அருகே சதிக்கல்லும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆணும் பெண்ணும் காதலிப்பதை அந்த காலத்தில் மையல் என அழைப்பர். இந்நிலையில் கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உடன்கட்டை ஏறி உயிரிழந்ததால் மையல் ஏறிய பாளையம் என பெயரிடப்பட்டது. பின்பு அது உருமாறி தற்போது மயிலேறி பாளையம் என அழைக்கப்படுகிறது. இந்த ஊருக்கென பழமையான வரலாறும் இருக்கிறது என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |