வீரப்பன் குறித்த இணைய தொடருக்கு எதிராக வழக்கு தொடர இருப்பதாக அவரது மனைவி முத்துலட்சுமி தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி பேசுகையில், “தமிழ்நாட்டில் இப்போதும் பல இளைஞர்கள் வீரப்பனை கதாநாயகனாக பார்ப்பதாகவும், ஆனால் அவரது புகழை கெடுக்கும் விதமாக திரைப்படங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் சிலர் தவறாக சித்தரித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் இனி வீரப்பனைப் பற்றிய திரைப்படம் மற்றும் குறும்படம் யார் எடுப்பதாக இருந்தாலும் என்னிடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் வீரப்பன் குறித்து எடுக்கும் படம் ஓடி விடும் என்று நினைப்பதால் அவரை தவறாக சித்தரித்து விளம்பரத்துக்காக தவறாக சித்தரித்து இணைய தொடர் எடுத்த இயக்குனர் ஏ.எம்.ஆர் ரமேஷ் மீது வழக்கு தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.