Categories
மாநில செய்திகள்

வீரப்பன் கொலை வழக்கு.. “எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை”… விடுதலையானவர்கள் பேட்டி…!!!!!

வீரப்பன் கொலை வழக்கில் கைதாகி 30 வருடங்களுக்கும் மேலாக ஆண்டியப்பனும் மற்றும் பெருமாளும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் தமிழக அரசு முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு இருவரையும்  விடுதலை செய்துள்ளது. இதனையடுத்து  ஈரோடு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் சந்தன கடத்தல் வீரப்பனுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளனர். மேலும்  விடுதலை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி எனவும்  தண்டனை காலம் முடிந்து எங்களைப் போல் சிறைகளில் தவித்து வருபவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |