Categories
சினிமா தமிழ் சினிமா

வீரமங்கை வேலுநாச்சியாராக நடிப்பது உண்மையா?… நயன்தாரா தரப்பு விளக்கம்…!!!

வீரமங்கை வேலுநாச்சியார் கதையில் நடிப்பது குறித்து நயன்தாரா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் சரித்திர கதையம்சம் கொண்ட படங்கள் அதிகம் தயாராகிவருகிறது. பிரமாண்டமான பாகுபலி படத்திற்கு சரித்திர கதைகளை ரசிகர்கள் அதிக அளவு விரும்ப ஆரம்பித்துவிட்டனர். தற்போது இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் வரலாற்று கதையை படமாக்கி வருகிறார் . அதேபோல் ராமாயண காவியம் கதையில் பிரபாஸ் ,சயிப் அலி கான் நடிப்பில் ஆதிபுருஷ் படம் உருவாகிறது . கங்கனா ரனாவத் நடிப்பில் ஜான்சி ராணி லட்சுமிபாய் வாழ்க்கை ‘மணிகர்ணிகா’ என்ற தலைப்பில் வெளியானது ‌. இந்நிலையில் பதினேழாம் நூற்றாண்டில் சிவகங்கை பகுதியில் ஆட்சி செய்து ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய வீரமங்கை வேலு நாச்சியாரின் வாழ்க்கை கதை உருவாக உள்ளதாக கூறப்பட்டது .

இதில் வேலுநாச்சியார் கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. தற்பொழுது இதுதொடர்பாக நயன்தாராவின் பிஆர்ஓ அளித்துள்ள விளக்கத்தில் இந்த செய்திகள் உண்மை இல்லை என தெரிய வந்துள்ளது . அவர் ‘வேலுநாச்சியார் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக பரவும் செய்திகள் உண்மையில்லை’ என கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Categories

Tech |