வேலு நாச்சியாரின் வீரத்தையும், தியாகத்தையும் அனைவரும் போற்றி வணங்க வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார்.
ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி வேலு நாச்சியாரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இன்றும் இவரது நினைவு நாளை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பலர் அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, “ஆங்கிலேயரின் அடக்குமுறை எதிர்த்து போராடிய பேரரசி வீரமங்கை வேலு நாச்சியாரின் நினைவு நாள் இன்று. எனவே நாம் அனைவரும் அவரின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.