Categories
மாநில செய்திகள்

வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு 20 லட்சம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!!

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 20 லட்சம் ரூபாயை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

ராணுவத்தில் பணியாற்றி மரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 போர் வீரர்களின் வாரிசுகளுக்கு தலா 20 லட்சம் நிவாரண நிதி மற்றும் கேப்டன் குபேர காந்திராஜ் அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் இன்று வழங்கினார்.

ராணுவத்தில் பணியாற்றிய வீரமரணமடைந்த காஞ்சிபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த படைவீரர் ஏகாம்பரம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டத்தை சேர்ந்த படைவீரர் கருப்பசாமி, தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்தை சேர்ந்த படைவீரர் பழனிகுமார் ஆகியோர்களின் மனைவிகளை நேரில் அழைத்த முதல்வர் மு க ஸ்டாலின் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து தலா 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் வெ இறையன்பு, பொதுச் செயலாளர் ஜெகநாதன், பொதுத்துறை சிறப்புச் செயலாளர் கலையரசி ஆகியோர் உடன் இருந்தனர்.

Categories

Tech |