கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் உயிர்த் தியாகம் செய்த 20 இந்திய வீரர்களின் நினைவாக போர் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்கள் இடையே கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி லடாக் எல்லையில் இருக்கின்ற கல்வான் பள்ளத்தாக்கில் பயங்கர மோதல் ஒன்று ஏற்பட்டது. அத்துமீறி உள்ளே நுழைந்த சீனா படையினரை இந்திய வீரர்கள் தாக்கினர். அப்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த நிலையில் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் உயிர்த் தியாகம் செய்த இந்திய வீரர்கள் 20 பேரை நினைவு கூறும் வகையில்,லடாக்கில் உள்ள சாலையில் நினைவுச்சின்னம் கட்டப்படுகிறது.
அதில் கல்வான் மோதலின் உயிர் தியாகம் செய்த 20 வீரர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் பொறிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி கடந்த ஜூன் 15ஆம் தேதி நடந்த சம்பவம் பற்றி அதை விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.