Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“வீரவநல்லூரில் புதியதாக கட்டப்படும் பாலம்”…. அவ்வழியாக வந்த கார் கவிழ்ந்து விழுந்து விபத்து…!!!!!

வீரவநல்லூரில் புதியதாக கட்டப்படும் பாலத்தில் அவ்வழியாக சென்ற கார் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

திருச்செந்தூர் பாபநாசம் இடையேயான சாலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதால் வீரவநல்லூர் புறவழி சாலையில் தனியார் ஆலை அருகே புதிய பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்களுக்காக தற்காலிகமாக மண் சாலை அமைக்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவ்வழியாக சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக திடீரென புதிதாகக் கட்டப்பட்டிருந்த பாலத்துக்குள் செங்குத்தாக பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தார்கள்.

Categories

Tech |