கால்பந்து வீராங்கனை மாணவி பிரியா காலில் அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இந்த நிலையில் பிரியாவின் மரணத்தை அரசியல் நோக்கத்துடன் அணுகுவது எந்த தலைவர்களுக்கும் அழகல்ல என்று அமைச்சர் மா.சு தெரிவித்துள்ளார். மாணவி பிரியாவின் உயிரிழப்பு மிக துயரமான நிகழ்வு. அவருடைய குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்கப்படும்.
பிரியாவுக்கு சிகிச்சைக்கு பின்னர் பேட்டரி கால் பொருத்தப்படும் என்று கூறப்பட்ட நிலையில் இந்த துயர சம்பவம் நடந்துவிட்டது. மேலும் பிரியாவிற்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் மேலும் இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.