Categories
உலக செய்திகள்

வீரியத்தோடு தாக்கிய கொரோனா – பலி எண்ணிக்கை 1868 ஆக அதிகரித்தது ….!!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1868 ஆக அதிகரித்துள்ளது.

சீன நாட்டின்  ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனா மட்டுமில்லாமல் உலக நாடுகளையே கடுமையாக மிரட்டி வருகின்றது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு பணியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு  , பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது. இதனால் அங்குள்ள மருத்துவர்கள் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

தற்போதைய நிலவரம் படி கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,868- ஆக  உயர்ந்துள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72,436 ஆக  சுமார் ஒரு லட்சத்தை நெருங்கும் நிலையில் இருக்கின்றது. இது குறித்து அங்குள்ள சீன  தேசிய மருத்துவ கமிஷன் அதிகாரிகள்  கூறும் போது கடந்த மாதம் 28-ந் தேதி 32.4 சதவீதமாக இருந்த நோயின் வீரியம் கடந்த 15-ந் தேதி அது 21.6 சதவீதமாக குறைந்திருப்பதாக நம்பிக்கை தெரிவித்தனர்.

Categories

Tech |