Categories
சினிமா தமிழ் சினிமா

வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி வந்தாச்சி…… மகிழ்ச்சியில் ரஜினி Family…..!!!!!

தமிழ் சினிமாவில் பணியாற்றும் வரைகலை வடிவமைப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் ஆக்கர் பிக்சர் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் ஆவார். ஒரு வரைகலை வடிவமைப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய செளந்தர்யா, அவரது தந்தை ரஜினிகாந்த் நடித்த படங்களில் தலைப்புக் காட்சிகளை வடிவமைக்கத் தொடங்கினார். அவர் கோவா திரைப்படத்தின் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க திரைப்பட தயாரிப்பாளராகவும் ஆனார். ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படத்தில் ஒரு இயக்குனராக அறிமுகமானார்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா 2-வது குழந்தை பிறந்துள்ளது. சவுந்தர்யாவுக்கு ஏற்கனவே வேத் என்ற முதல் குழந்தை உள்ளது. முதல் கணவருடன் விவாகரத்து ஆன நிலையில், 2-வதாக சவுந்தர்யா விஷாகன் என்பவரை 2019-ல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், சவுந்தர்யா விஷாகன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து சவுந்தர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “வீர் ரஜினிகாந்த் வணங்காமுடியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |