ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் வீரமங்கை வேலுநாச்சியார். இந்திய சுதந்திரத்திற்காக வெள்ளைய கும்பினி அரசை எதிர்த்துப் போரிட்ட முதல் பெண்மணி என்று ஜான்சி ராணியை இன்றுவரை சொல்லி வருகிறார்கள். ஆனால் இவருக்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 1730-ஆம் ஆண்டிலேயே வேலுநாச்சியார் பிறந்துவிட்டார்.
வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்த தினம் இன்று. நாயக்கர் வம்சத்தை சேர்ந்தவரான ராணி வேலுநாச்சியார், இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள சக்கந்தி என்ற ஊரில் 1703- ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி பிறந்தார். 1780 முதல் 1789 வரை சிவகங்கையில் அவர் ஆட்சி செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்த நாளான இன்று, வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளில் அவரின் நினைவு கூறுகிறேன். அவரது வீரமும், துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்விட் செய்துள்ளார்.