எல்லை பாதுகாப்பு பணியின்போது வீர மரணம் அடைந்த இந்தோ – திபெத் போலீசாரின் குடும்பங்களுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1962-ஆம் ஆண்டு இந்தியா மீது சீனா போர் தொடுத்தது. அப்போது 3,488 கி.மீ எல்லையை பாதுகாப்பதற்காக இந்தோ – திபெத் போலீஸ் படை உருவாக்கப்பட்டது. அதில் 90 ஆயிரம் வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். எல்லை பாதுகாப்பு பணியின் போது ஏற்படும் மோதல்களில் பலர் வீரமரணம் அடைகிறார்கள்.
இந்த நிலையில் அவர்களின் வாரிசு அல்லது குடும்பங்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்கும் விழா டெல்லியில் உள்ள இந்தோ – திபெத் போலிஸ் தலைமையகத்தில் நடந்தது. இது குறித்து பேசிய இந்தோ – இதற்கு போலீஸ் செய்தி தொடர்பாளர் விவேக் குமார் பாண்டே, நமது நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் முக்கியமான ஒன்றாக வீரமரணம் ஏந்திய இந்தோ – திபெத் போலீஸாரின் வாரிசுகளுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.