எழுத்தாளர் ஒருவர் கடைக்கு சென்ற பொது அவரை கடைக்காரர் பிச்சைக்காரன் என்று கூறியது மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் வசித்து வருபவர் Welsey (40). இவர் பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டதால் அவரால் சரியாக பேச முடியாது. எனவே எங்கு சென்றாலும் வீல்சேரில் தான் சென்றுள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவர் பெரிய வணிக வளாகம் ஒன்றிற்கு சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க சென்றுள்ளார். ஆனால் அந்த கடைக்காரர் welseyயை கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார். மேலும் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மற்றும் கடைக்காரர் இருவரும் சேர்ந்து இங்கு யாரிடமும் பணம் கேட்டு பிச்சை எடுக்கக்கூடாது.
இங்கிருந்து தொந்தரவு செய்யாமல் கிளம்பு என்று கூறி உள்ளனர். இதனால் வருத்தமடைந்த welsey தான் பிச்சைக்காரன் இல்லை ஒரு எழுத்தாளர் என்று கூற முயன்றும் அவர்கள் அதை கேட்க தயாராக இல்லை. பின்னர் தனது மனைவியிடம் போன் செய்து வேதனையுடன் தனக்கு நேர்ந்த நிலையை கூறியுள்ளார்.இதனையடுத்து அந்தப் பகுதியில் இருந்த இரண்டு நண்பர்களுக்கு போன் செய்து welseyயின் மனைவி அவருக்கு உதவும்படி கேட்டுள்ளார்.
அங்கு வந்த welsey மனைவியின் நண்பர்கள், பாதுகாப்பு அதிகாரி மற்றும் கடைகரிடம் சென்று இவர் பிச்சைக்காரர் இல்லை எழுத்தாளர் என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தங்கள் செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளனர். மேலும் செய்தி தொடர்பாளர் ஒருவர் இதுகுறித்து கூறுகையில், “வாடிக்கையாளர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.