ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்ததால் விற்பனையாகத வெங்காயத்தை வீதியில் கொட்டி வருகின்றனர் விவசாயிகள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் சென்ற சில நாட்களாகவே சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்திருப்பதால் வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்து இருக்கின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு கிலோ வெங்காயம் 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ஏழு முதல் பத்து ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.
இதனால் விவசாயிகள் வேதனை அடைந்திருக்கின்றனர். சந்தைக்கு கொண்டு வந்த வெங்காயங்கள் வாங்கப்படாமல் அங்கேயே இருப்பு வைக்கப்பட்டுள்ளதால் வெங்காயம் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்காயத்தை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் வீதியில் கொட்டும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற நிகழ்வு மழைக்காலத்தில் மட்டுமே நடக்கும் நிலையில் தற்போது கோடை காலத்தில் ஏற்பட்டிருக்கின்றது.