Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்” தமிழ் பரப்புரை கழக தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்…..!!!!

தமிழ் பரப்புரை கழக தொடக்க விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் விழாவில் பேசியதாவது, தமிழ் வெறும் மொழி அல்ல அது நம் உயிர். கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழ் மொழியைப் பற்றி அடிக்கடி பெருமையாக சொல்வார்கள். அதை நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் சொல்லி இருக்கிறேன். அதை இந்த விழாவிலும் கூற விரும்புகிறேன். உள்ளங்கவர் ஓவியமே, உற்சாக காவியமே, ஓடை நறுமலரே, ஒளியுமிழ் புது நிலவே, அன்பே, அமுதே, அழகே, உயிரே, இன்பமே, இனிய தென்றலே, பனியே, கனியே, பழரச சுவையே, மரகத மணியே, மாணிக்க சுடரே, மன்பதை விளக்கே என்றெல்லாம் தமிழை அழைக்க தோன்றுகிறது. இருப்பினும் தமிழ் மொழியை தமிழே என்று அழைப்பதில் கிடைக்கும் சுகம் வேறு எதிலும் கிடைக்காது.

அப்படிப்பட்ட தமிழ் மொழியை பெருமைப்படுத்தும் விதமாக தமிழ் பரப்புரை கழகத்தை தொடங்கி வைப்பது என்னுடைய வாழ்நாள் கடமையாக மட்டுமல்ல, பெருமையாகவும் கருதுகிறேன்.‌ வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும். திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு தமிழ் பாதுகாப்பு கழகம் தொடங்குவது என்பது முதல் கடமை. கடந்த 1999-ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தமிழ் இணைய வழி கல்வி கழகம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அதன் பின் கடந்த 2000-ம் ஆண்டு தமிழ் இணைய வழி கல்வி கழகம் தொடங்கப்பட்டது. நாம் அனைவரும் உணர்வால், உள்ளத்தால், தமிழால் இணைந்துள்ளோம். நார்வே, ஓமன், குவைத் மற்றும் அமெரிக்கா போன்ற உறவுகளும் நம்மோடு இணைந்துள்ளது.

மொழிக்கு மட்டும்தான் அன்பால் இணையக்கூடிய ஆற்றல் இருக்கிறது. இப்படி மொழியால் இணைந்தவர்களை சாதி மற்றும் மதத்தால் பிரிக்க முடியாது. தமிழால் ஒன்றிணைய வேண்டிய காலகட்டத்தில் தமிழ் பரப்புரை கழகம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு என்ற பெயரை சூட்டியவர் அறிஞர் அண்ணா. அப்படிப்பட்ட அண்ணாவின் செம்மொழி கனவை பெற்று தந்தவர் கலைஞர் கருணாநிதியின் கனவை நிறைவேற்றும் நாளாக இன்று அமையும். தொண்டு செய்வாய் தமிழுக்கு துரை தோறும் துடித்தெழுந்தே. இப்படிப்பட்ட இனிய வாய்ப்பினை பெற்று தந்த உங்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

Categories

Tech |