வூஹானில் தொற்றால் மரணமடைந்தவர்களின் ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருந்ததாக மருத்துவ ஆய்வு தெரிவித்துள்ளது
கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா தொற்றினால் உலக நாடுகள் முழுவதிலும் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. ஆரம்பகட்டத்தில் வூஹானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மரணங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் பின்னர் பல கட்டுப்பாடுகளால் தொற்றினை விரைவில் கட்டுப்படுத்தினர்.
தற்போது மீண்டும் சீனாவின் தலைநகரில் தொற்றின் தாக்கம் ஏற்பட்டு வரும் நிலையில் வூஹான் நகரில் புதிய மருத்துவ ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த ஆய்வின் முடிவில் வூஹான் நகரில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் ஏராளமானவர்களுக்கு ரத்தத்தில் வழக்கத்தைவிட அதிக அளவு சர்க்கரை இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதுவே அவர்களின் மரணத்திற்கான காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.