தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது .
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அசுரன் . இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியிருந்த இந்த படத்தில் மஞ்சு வாரியர், அம்மு அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது . தற்போது அசுரன் திரைப்படம் தெலுங்கில் நாரப்பா என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
இதில் வெங்கடேஷ், பிரியாமணி, அமலாபால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் நாரப்பா திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.