Categories
ஆன்மிகம் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெங்கடேஸ்வர சுவாமி வாரி திருக்கோவில்…. பவித்ரோற்சவ நிகழ்ச்சியை முன்னிட்டு…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

தென் திருமலை வெங்கடேஸ்வர சுவாமி வாரி கோவிலில் பவித்ரோற்சவ நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென் திருமலை திருப்பதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி வாரி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பவித்ரோற்சவ நிகழ்ச்சிகள் கடந்த 23ஆம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பூஜைகளும் அலங்காரங்களும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று இதன் நிறைவு விழாவானது அதிகாலை 4.30 மணிக்கு சுப்ரபாதத்துடன் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து காலை 10 மணிக்கு ஸ்ரீ மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி ஸ்நபன திருமஞ்சனம் மற்றும் மாலை 4 மணியளவில் ஸ்ரீ மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் மேளதாளம் முழங்க மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இதனைத் தொடர்ந்து புண்ணியாக வாஜனம் ஹோமமும் வசுத்தாரா ஹோமும் நடைபெற்றது. பின்னர் இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவையுடன் நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கே.ஜி குழுமத்தின் தலைவரான கே.ஜி. பால கிருஷ்ணன், டெனிம் நிர்வாக இயக்குனர் ஸ்ரீராம், ஸ்ரீ கண்ணபிரான் மில்க், நிர்வாக இயக்குனர் ஸ்ரீஹரி மற்றும் பக்தர்கள் திரளானோர் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.

Categories

Tech |