பிரபல நடிகரும், சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் ஏற்கனவே அனுமத்திக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். இவருடைய மறைவுக்கு பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் தேமுதிக தலைவர் விஜயகாந்த், வெங்கட்சுபா கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அனைவரிடமும் அன்புடன் பழக்கூடிய கூடிய ஒரு இனிமையான மனிதர். சினிமா உலகில் அவருடைய பங்கு மிகவும் முக்கியமானது என்று தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.